ஒரிசாவில் யூதர்கள், பார்சிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது’

ஒரிசாவில் யூதர்கள், பார்சிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது’

புவனேசுவரம், டிச. 23: ஒரிசா மாநிலத்தில் யூதர்கள் மற்றும் பார்சி இனத்தவர்கள் தற்போது இல்லை என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இம்மாநிலத்தில் உள்ள பிற மதத்தவர்களின் எண்ணிக்கை 1951-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்த போதிலும் யூத மற்றும் பார்சி இனத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 1951-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் 72 யூதர்கள், 181 பார்சி இனத்தவர்கள் இருந்தனர். ஆனால் 2001-ம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் இவர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இம்மாநிலத்தில் 1951-ம் ஆண்டு 1,43,18,411 ஆக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை தற்போது 3,47,26,129 ஆக உயர்ந்தது. இதேபோல முஸ்லிம்களின் எண்ணிக்கை 1,76,338-லிருந்து 7,61,985 ஆக உயர்ந்தது.

இதேபோல கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1,41,934-ல் இருந்து 8,97,861 ஆக உயர்ந்தது. ஜைனர்களின் எண்ணிக்கை 1,248-லிருந்து 9,154 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல பெüத்தர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 9,863 ஆக உயர்ந்தது. சீக்கியர்களின் எண்ணிக்கை 4,163-லிருந்து 17,492 ஆக உயர்ந்தது. மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 1,46,45,946-லிருந்து 3,67,84,465 ஆக உயர்ந்தது.

போதிய விழிப்புணர்வு இல்லாமை, சிறு குடும்ப முறை, பெண் கல்வி குறைவு மற்றும் பல்வேறு சமூக, பொருளாதார, கலாசாரத்தில் பின்தங்கியிருப்பதும் மக்கள் தொகை பெருக்கத்துக்குக் காரணம் என்று மாநில சட்டப் பேரவையில் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

பின்னூட்டமொன்றை இடுக